Friday 19 February 2016

முகம் தெரியாத நண்பர்கள்

முகம் தெரியாத நண்பர்கள் நன்றாக இருக்கட்டும் என்று  விளக்கம் அளித்தற்கு நன்றி என்று முந்தைய பதிவில் ஒரு நண்பர் பதிவு செய்திருந்தார்..
.
நீங்கள் எப்போதாவது  BIKE  இல் SIDE STAND எடுக்காமல் சென்று பாருங்கள் சகோதரா ..
SIR ,STAND எடுக்க வில்லை STAND எடுக்கவில்லை என்று உங்களை ஒரு 10 பேராவது எச்சரிப்பார்கள்.
நீங்கள் கீழே விழுந்து விட கூடாது என்று எத்தனை பேர் எச்சரிகின்றனர் அவர்களில் நிறைய பேருக்கு உங்களை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அவர்களுக்கு நீங்கள் யாரென்று தெரியாது,ஆனால் அவர்களின் ஒரே கவலை சகமனிதன் ஒருவன் கீழே விழுந்து காயம் ஏற்படுத்தி கொள்ள கூடாதே என்ற அக்கறை மட்டும் தான் இருக்கும்..
அது போல் தான்  முந்தைய  பதிவும்..
அந்த பதிவு எழுதியது எதையும் தெரிந்து கொள்ளாமல் இங்கே பணத்தை இழந்து கொண்டிருக்கும் சக மனிதன் மீதான ஒரு அக்கறை மட்டுமே.

இங்கே சந்தை முழுவதும் ஏற்கனவே தீர்மானம் செய்யபட்டபடி தான்  நகரும்,
FII -DII என்ற இரண்டு பணக்கார வர்க்கத்திற்கு நடுவே நடக்கும் வர்த்தகத்தை இதை புரிந்து கொள்ளாமல்,எங்கோ கடுமையான உடல் வருத்தி வேலை செய்து சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை இங்கே கொண்டு வந்து இழந்து வருகின்றனர்.

நிறைய நண்பர்கள் எதுவுமே கற்று கொள்ள முயற்சி செய்யவில்லை...
சிலர் கற்று கொள்ள முயற்சி செய்கின்றனர்..ஆனால்
அவர்களும் அந்த INDICATOR இந்த TECHNICAL (MACD ,RSI,)என்று ஆராய்ச்சி செய்தே நேரத்தையும் பணத்தையும் வீணடித்து கொண்டு இருகின்றனர்..
(நானும் ஒரு காலத்தில் இதெல்லாம் ஆராய்ந்து தோற்று கொண்டு இருந்தவன் தான்.)

சந்தையில் அதற்காக TECHNICAL கற்று கொள்ள வேண்டாம் என்று சொல்ல வில்லை..முதலில் அடிப்படையை கற்று கொள்ளுங்கள் எல்லா INDICATOR களுக்கும் அடிப்படை CANDLE இது மட்டும் கற்று கொள்ளுங்கள் அதன் பின் மற்ற விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்..

INDICATORS,FOLLOW செய்வதை விட CANDLES பின்பற்றுங்கள்..
அதன் பின் CANDLES  வரைபவர்களை  பின்பற்றுங்கள் ..
BIG PLAYERS.. இவர்களால் தான் எல்லா  CANDLE களும் வரைய படுகின்றன..
2 நாளுக்கு (18.02.2016) முன்பு கூட ஒரு OPTION இல் BIG PLAYER களால் வரையப்பட்ட ஒரு CANDLE CHART, SCREEN SHOT எடுத்து வைத்துள்ளேன்.. முடிந்தால் விரைவில் அதை UPDATE  செய்கிறேன்.. )

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டு TRADING செய்ய வந்தால் முதலில் உங்கள முதலீடை காப்பாற்றி கொள்ளலாம்..அதன் பின் இலாபம் சம்பாதிக்கலாம்.
இதை மட்டும் தான் நான் சொல்ல வருவது..

சில முறை ஆட்டோவில் செல்லும் போது கவனித்து இருக்கிறேன். RTO ரெய்டில் மாட்டி விட்டு FINE கட்டிவிட்டு போகும் ஆட்டோ காரர்கள் ..இந்த பக்கம் RTO ரெய்டு நடக்கிறது..போகாதே போகாதே என்று எதிரே வரும் எல்லா ஆட்டோ காரர்களிடம் சொல்லிக்கொண்டே போவார்கள்..அது தெரிந்தவன் தெரியாதவன் என எல்லோரிடமும் சொல்லுவார்கள்..
நாம தான் மாட்டி FINE கட்டி விட்டோம் அடுத்தவனும் மாட்டி கொள்ள கொள்ள வேண்டாமே வேறு பாதையில் அவன் சென்று விட்டால் தப்பித்து கொள்வானே என்று..

அது போலத் தான்..இந்த பக்கம் போனால் பிரச்னை இருக்கிறது..திருத்தி கொண்டு போங்கள் அல்லது வேறு பாதையில் சென்றுவிடுங்கள் என்ற சொல்லும் சக மனிதன் மீதான ஒரு சிறு அக்கறை மட்டுமே  இது...

இந்த பதிவுகளின் நோக்கம் இந்த பதிவின் மூலம் உங்களின் பணத்தில் ஒரு ஒரு ரூபாயாவது சந்தை இழப்பில் இருந்து காப்பாற்றபட்டு விடாதா என்ற ஆதங்கமே..
தோழமையுடன்.
ZFORMULA RAVIKUMAR